விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

பயப்படாதே சிறுமந்தையே



பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12:32

ஒரு விவசாயி தனது நிலத்தில் பறவைகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தை படைத்தது அந்த தோட்டத்தில் நிறுத்தினார். அந்த வைக்கோல் பொம்மையை பார்த்து எல்லா பறவைகளும் பயந்து ஓட இந்த வைக்கோல் பொம்மைக்கு தலைக்கனம் வந்துவிட்டது. தோட்டக்காரன் தான் தன்னை படைத்ததை அறிந்த போதும் நான்தான் அந்த தோட்டத்தை பாதுகாக்கின்றேன் என்று தன்னை அந்த விவசாயிக்கும் மேலாக நினைத்துக் கொண்டது. ஒரு நாள் தோட்டக்காறரின் பிள்ளைகள் தோட்டத்தில் விளைந்திருப்பதை அறுவடை செய்யவந்தார்கள். வைக்கோல் பொம்மை அவர்களை வெளியில் போகும்படியாக கத்தஆரம்பித்துவிட்டது. இதை பார்த்த தோட்டத்தின் எஜமான், இந்த நிலத்தின் அணைத்து ஆசீர்வாதங்களுக்கும் அவர்களுடையதே என்று சொல்லி அந்த வைக்கோல் பொம்மையை தீயினால் சுட்டெரித்துவிட்டார்.

இந்த கதையில் இருப்பதை போன்று தான் தேவன் இந்த பூமியை படைத்து அவரது பிள்ளைகளை பார்த்து “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதி1:28). பிச்சாசனவன் தந்திரமாக அதை மனிதனிடம் இருந்து பறித்து கொண்டு மனிதனுக்கு அந்த ஆசீர்வாதத்தில் பங்கில்லை என்று சொல்லி மனிதக்கும் தேவனுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறான். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசிற்கு பயப்பட தேவையில்லை. அவன் உருவத்தில் பெரியவனாக இருந்தாலும் அது வைக்கோல் தான். அவனை சுட்டெரிக்கும் வேதமென்னும் அக்கினயையும், ஜெபமென்னும் அக்கிணி ஜுவாலையையும் தேவன் நம்மிடத்தில் கொடுத்திருக்கிறார். ஆகவே தேவன் நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாத்ததில் பங்கடைய சபைக்கு சென்றால் மட்டும் போதாது. வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் அக்கினியாய் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பிசாசானவன் நம்மருகே வருவதற்கே பயப்படுவான். நாமும் கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை எந்தவித தடையுமின்றி சுதந்தரித்து கொள்ளலாம். ஆமென். அல்லேலூயா.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " பயப்படாதே சிறுமந்தையே "

Post a Comment