விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேவனுடைய ராஜ்ஜியம்


தேவனுடைய ராஜ்ஜியம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். மாற்கு 4:30-32

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அச்சிறிய விதை வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு இருப்பிடமும் நிழலும் தருவதாய் இருந்தது. தேவ‌னுடைய‌ ராஜ்ஜியமும் அந்த ராஜ்யத்தின் பிள்ளைகளும் கடுகு விதையைப் போல‌ மிக‌ப்பெரிய‌ ந‌ன்மையுள்ள‌ ஈவுக‌ளை உள்ளடக்கியுள்ளனர் என‌ விவ‌ரிக்கிறார். 

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கடுகு விதையானது பாலஸ்தீன நாட்டில் விளையும் ஒருவகை கடுகு மரமாகும். அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும். இயேசு பரலோக ராஜ்யத்தை இந்த கடுகு விதையோடு ஒப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் பரலோகத்திற்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். முதலில் கடுகு விதையளவு கிறிஸ்த்துவைப் பற்றி அறிந்து கொள்ளுகிறான். இயேசுவே பரலோகம் செல்ல வழி என்றும், அவரே உலகத்தின் அணைத்து மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார் என்று அறிந்து கொள்ளுகிறான். பின்னர் இந்த சுவிஷேச கடுகு விதையை தனது உள்ளமென்னும் நிலத்தில் விதைத்துவிடுகிறான். இப்பொழுது இந்த விதைக்கு ஜெபம் என்னும் தண்ணீரும், வேத வாசிப்பு என்னும் உரமும் தேவைப்படுகிறது. இயேசுவின் ஆசை என்னெவென்றால் அந்த விதை மரமாக வளர்ந்து அநேகர் அதின் நிழலில் வந்து பயன்பெற்று பரலோக ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதே.

ஆனால் இன்றைக்கு அநேகர் ஜெபத்தையும்,வேதவாசிப்பையும் மறந்ததால் ஆரம்பத்தில் விதைக்கப்பட்ட விதை இன்னும் விதையாகவே உள்ளது. பிசாசானவன் இந்த விதைக்கு ஜெபம் என்னும் தண்ணீரும், வேத வாசிப்பு என்னும் உரமும் கிடைக்கக்கூடாத படி, ஆண்களை அலுவலக வேலைகளினாலும், பெண்களை வீட்டு வேலைகளினாலும் நிறைத்து அவர்களை சோர்வடைய செய்கிறான். சோர்வை நீக்க தொலைக்காட்சி முன் அமர்வதே சிறந்த வழியென்றும் காண்பித்து, உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் விதை துளிர் விடாதபடி செய்கிறான். ஒரு நிமிடம் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என நம்மை நிதானித்து பார்ப்போம். நம்முள்ளதில் விதைக்கப்பட்ட சுவிஷேச விதையானது இன்றைக்கு வளர்ந்து மரமாக நிற்கிறதா அல்லது விதையாகவே உள்ளத்தின் ஆழத்தில் இருக்கிறதா.

இதை படித்தவன்னமாகவே உள்ளத்திலே இந்த ஜெபத்தை செயுங்கள். இயேசுவே, விலைமதிக்க முடியாத சொத்தாகிய உமது இரட்சிப்பின் செய்தியை அறிந்தேன். கடுகு விதை வளர்ந்து அநேக்கருக்கு பயன் கொடுப்பது போல நானும் அனுதினமும் ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் வளர்ந்து அநேகரை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படி, நீர் சிலுவையில் செய்த தியாகத்தை இரட்சிப்பின் செய்தியாய் பலருக்கு அறிவிப்பேன். இயேசுவின் மூலம் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே..ஆமென்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " தேவனுடைய ராஜ்ஜியம் "

Post a Comment