விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Prayer walk @ Vaiyappamalai

யார் நமது காரியமாய் போவார்

இரண்டு நாள் கிராம ஊழியத்தை, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் சிறப்பாக செய்து முடிக்க கிருபை நல்கிய தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். வையப்பமலையிலிருந்து மோர்பாளையம் வரை (சுமார் 20 கிலோ மீட்டர்) ஜெப நடை செய்து அநேக கிராம மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிவித்தோம். கிட்டதட்ட இருபதுக்கும் அதிகமான கிராமங்கள் வழியாக நடந்து சென்ற பொழுது, கிறிஸ்துவைப்பற்றி அறிந்திராத இருளின் ஆதிக்கத்தில் பிடிக்கப்பட்டிருந்த மக்களை பார்த்த பொழுது, இன்னும் அநேக ஊழியர்கள் அந்த மக்களுக்கு தேவைப்படுகிறார்கள்.
பஸ் வசதியில்லாத ஊர்களில் வாழும் மக்களுக்கு யார் இயேசுவை அன்பினை அறிவிப்பார்கள்? ஊழியக்காரர்கள் மாத்திரமே கிறிஸ்துவை பிறருக்கு சொல்ல வேண்டும் என்றல்ல. கிறிதுவின் அன்பை ருசித்த ஒவ்வொரு மனிதனும் அந்த அன்பை பிறருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். அன்றைக்கு "யாரை நான் அனுப்புவேன் யார் நமது காரியமாய் போவார்" என்ற சத்தம் ஏசாயாவின் காதில் கேட்டவுடன் கிடைத்த அற்புத வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாமல், காலம் தாழ்த்தாமல், "இதோ அடியேன் இருக்கிறேன்" என்றார் ஏசாயா இறை வாக்கினர். ஒவ்வொரு கிறிஸ்தவனும் “ஆண்டவரே உமது காரியம் என்ன?” "இதோ அடியேன் இருக்கிறேன்" என்று இயேசுவிடம் ஜெபித்து செயல்பட தொடங்கினால், நிச்சயமாக பெரிய எழுப்புதலை தேசத்தில் காணலாம். 
 

0 Response to " Prayer walk @ Vaiyappamalai "

Post a Comment