விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Prayer walk @ Namakkal Villages

இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்று மத்தேயு 9:35-ல் சொல்லப்பட்டது போல, கடந்த 8ம் தேதி சனிக்கிழமை “வையப்பமலையிலிருந்து ஆட்டையாம்பட்டி வரை” (22 Km ) பன்னிரெண்டுக்கும் அதிகமான கிராமங்களின் வழியாக ஜெபநடை செய்து அநேக மக்களுக்கு சுவிஷேச பிரதிகளை கொடுத்தோம். அந்த கிராமங்களில் நிலவும் வறட்சி நிலைமை மாறுவதற்காக நாங்கள் பிரார்த்தனையும் செய்தோம். சரிவர பஸ் மற்றும் ரோடு வசதி இல்லாத கிராமங்களுக்கு நடந்து செல்வதால் கிராம மக்கள் அநேகர் எங்களுக்க்கு தண்ணீர் கொடுத்து அவர்களுடைய அன்பை காட்டினர். அவர்களுடைய முதல் கேள்வி ஏன் இப்படி நடந்து வருகுறீர்கள்? என்பது தான். கிராமங்களின் வறட்சி நிலை மாற ஜெபநடை செய்கிறோம் என்று சொல்லிய மறுநிமிடமே அவர்களுக்கு இயேசுவின் அன்பையும் சொல்லுவோம். அநேகர் ஆவலுடன் நாங்கள் கொடுக்கும் துண்டு பிரதிகளை வாங்கி படித்தார்கள். இன்னும் அநேகர் தங்களுக்காய் ஜெபிக்கும்படியாய் வேண்டினார்கள். நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்த்துவின் அன்பை அறியாத மக்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் ஜெபநடைகளை செய்து வருகிறோம். இந்த ஜெப நடையில் நீங்கள் இனைந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் (சகோ. டேவிட் - 09916 424 517).

இரண்டு நாள் கிராம ஊழியத்தை, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் சிறப்பாக செய்ய உதவிய கர்த்தருக்கு நன்றி. அநேகர் நாங்கள் செய்யும் இந்த ஜெபநடை ஊழியத்திர்க்காய் ஜெபித்தீர்கள். உங்களுக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

0 Response to " Prayer walk @ Namakkal Villages "

Post a Comment