விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (1841 – 1901)

கிறிஸ்துவிடம் நெருக்கி வரும் போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்களைக் குறித்த வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது என்று கூறிய ஜேம்ஸ் சால்மர்ஸ், நாகரீகமற்ற, மனித மாமிசம் உண்ணும் கொடூர பழங்குடிகள் நிறைந்த பசிபிக் கடலில் உள்ள நியு கினியா தீவிற்கு மிஷனரியாக சென்று துணிவுடன் நற்செய்தியை இறுதியில் பழங்குடி மக்களுக்கு உணவானார். இன்றைக்கு அந்த தீவில் உள்ள மக்களில் 96 சதவீதம் கிறிஸ்தவர்களாக உள்ளனர். ஒரு காலத்தில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் இயேசுவை ஆராதித்து வருகின்றார்கள். இதற்காக தந்து உயிரை தியாகம் செய்த மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (James Chalmers) என்பவரது வாழ்க்கை வரலாறை இந்த காட்டுரையில் காண்போம்.

மனித மாமிசம் உண்பவர்கள்
நைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்ததாக உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகசிரிய விடுதலைப் படைபோர் செய்த போது,விடுதலைப் படையிடம் பிடிபட்ட சிரிய இராணுவச் சிப்பாய் ஒருவரின் இதயத்தை வெட்டியெடுத்து, போராளி ஒருவர் உண்ற சம்பவம் நடந்தேறியது. அவரது உடலத்தின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுக்கும், ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடிவரும் பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவரான அபு சக்கார் என்பவர், ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான இராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம் என்று பலமாகக் கூறியபடி அதனை உண்றார். இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கும் நாம் வாழும் உலகத்தில் நடக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது. இவர்கள் நாகரீகம் அறிந்தும், தீய சக்திகளின் பிடியாலும், குருட்டு மதங்களை பின்பற்றுவதாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய நாகரீகம் வளர்ந்திராத நாட்களில், தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமும் மனித மாமிசத்தை உண்ணும பழக்கம் அதிகளவில் காணப்பட்டது. தற்போது அப்படிப்பட்ட தீவுகளில் வாழ்கின்ற மக்கள், நம்மைப்போல மிகுந்த நாகரீகத்துடன் வாழ்கின்றார்கள். ஒரு காலத்தில் யார் அந்த தீவிற்கு சென்றாலும் நரபலியாகிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அந்த தீவுகள் எல்லாம், அநேகர் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களாக மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? மரணமே ஆனாலும் பரவாயில்லை. கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தே தீருவோம் என்று, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த மக்களிடமாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்ற மிஷனரிகளே.

ஜேம்ஸ் சால்மர்ஸ்-ன் இளமைப் பருவம்
1841 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி ஜேம்ஸ் சால்மர்ஸ்ஸ்காட்லாந்து தேசத்தில் கல்சிற்ப ஆசாரியின் மகனாக பிறந்தார். 18 வயதில் தனது ஊரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டு இயேசுவின் அன்பை அறிந்து, தமது வாழ்க்கையை மிஷனரியாக அற்பணித்தார். பட்ட படிப்புகளை முடித்தவுடன் தமது 26ம் வயதில் லண்டன மிஷனரி சங்கத்தில் இணைந்தார்.

ரரோடோங்காதீவில் கிறிஸ்துவின் பணி
1867ம் வருடம்மே மாதம் ரரோடோங்கா” (Rarotonga) என்ற தீவிற்கு மிஷனரியாக வந்திறங்கினார் ஜேம்ஸ் சால்மர்ஸ்.கிறிஸ்துவை அறியாத ரரோடோங்காதீவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியை வெகு விரைவில் கற்று,அந்த மொழியிலே கிறிஸ்த்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தார். அந்த தீவில் பத்து வருடம் மிஷனரி பணி செய்து இருளின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை மெய்யான ஒளியாகிய இயேசுவினிடத்தில் சேர்த்தார்.

தீவு நாடான நியு கினியா-வில் கிறிஸ்துவின் பணி
1877 ம் வருடம்தமது 36ம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு மேல் வடபகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான நியு கினியாவிற்கு(New Guinea) தனது மனைவியோடு சென்றார் ஜேம்ஸ் சால்மர்ஸ். அந்த தீவுகளில் வசித்த மக்கள் மனித மாமிசம் உண்பவர்களாக இருந்தனர். ஆபத்து மிகுந்த அந்த மக்களுக்கு சுவிசேஷம் சொல்ல போகையில் தமது கையில் எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்து செல்ல மாட்டார். ஏனென்றால் கையில் ஆயுதங்களோடு சென்றால் வெள்ளை மனிதன் நம்மை தாக்க வந்திருக்கிறான் என்று சொல்லி ஓடுவார்கள். இல்லையென்றால் தாக்க தொடங்குவார்கள். ஆபத்து நிறைந்த பழங்குடி மக்களின் மேல் கரிசனை கொண்டவராய் கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்தார். 105 க்கும் அதிகமான கிராம தீவுகளுக்கு சென்று கிறிஸ்துவின் அறிவித்தார். 90 கிராம தீவுகளில் முதலாவது சென்ற வெள்ளை மனிதனும் இவரே. இயேசுவின் அன்பை எடுத்து சென்றவரும் இவரே ஆவார்.

பழங்குடி மக்களுக்கு உணவாகுதல்
1901 ம் வருடம் ஏப்ரல் 8 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறாக இருந்தது. முந்தைய நாளில் கோரிபாரி” (Goaribari Island) என்ற தீவிற்கு படகில் சென்றிருந்த ஜேம்ஸ் சால்மர்சை அத்தீவின் பழங்குடி மக்கள் சூழ்ந்து கொள்ளவே, படகை விட்டு அவர் இறங்காமல் நாளை வருவதாக கூறி தனது பகுதிக்கு வந்தார். அடுத்த நாள் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை முடித்து விட்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியை அறிவிக்க ஆபத்து நிறைந்த கோரிபாரிதீவிற்கு மீண்டும் சென்றார். ஒலிவர் டோம்கின்ஸ் (Oliver Tomkins) என்ற மிஷனரியும் உடன் சென்றார். இவர்களது வருகையால் மிகவும் மகிழ்ந்த அத்தீவின் பழங்குடி மக்கள் இருவரையும் உற்சாக வரவேற்புடன், புதிதாய் அமைக்கப்பட்ட தூபு” (Dubu) என்று அழைக்கப்படும் கேளிக்கை குடிசைக்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில் மனிதர்களை சாகும் வரை சண்டையிட வைத்து பின்னர் அவர்களை பலியாக்கி உணவாக உண்பார்கள். இதை அறிந்திராத ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தவன்னமாய் தூபுஎன்ற குடிசைக்கு சென்றனர். மரத்தினால் ஆன விக்ரகங்களை சுற்றிலும் அநேக மனித மண்டை ஓடுகள் குவிக்கபட்டிருந்தது. இருவரும் அதை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, எந்தவித எச்சரிப்பும் இன்றி அந்த பழங்குடி மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். சில நிமிடங்களில் அவர்களது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் கொதித்து கொண்டிருந்த குழம்பில் போடப்பட்டது. ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும், இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஈஸ்டர் நாளில்,  இயேசுவை அறிவித்துக்கொண்டே அந்த பழங்குடி மக்களுக்கு உணவாக மாறினர்.

ஜேம்ஸ் சால்மர்ஸ் மற்றும் ஒலிவர் டோம்கின்சின் உடல்கள் விதையாகவும், அந்த மக்களுக்கு உணவாகவும் மாறியதை அறிந்து அநேக மிஷனரிகள் நியு கினியாதீவை நோக்கி சென்று இயேசுவின் அன்பை அறிவித்தனர். அநேக மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவு, 7 கோடிக்கும் அதிமான மக்கள் வாழும் அந்த தீவுல், இன்றைக்கு 96% கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான், மிகுந்தவிளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)

மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். முதலாவதாக நாம் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து சாதித்து அநேகருடைய வாழ்வில் கிறிஸ்துவை வளர்க்க வேண்டும். முடிவிலே அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும்.இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவுக்காய் நாம் உருமாறி பின்னர் விதையாய் மாறவேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.ஆனால்,அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பும் அல்ல. அதினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் அல்ல.நீங்களும் நானும் கிறிஸ்துவைப் போல உருமாறி அவருக்காய் வாழ்ந்து சாதிக்க அழைக்கபட்டுள்ளோம். விதையாய் மண்ணில் வீழ்ந்து மிகுந்த விளைச்சலை கொடுக்கும் படியாகவும் அழைக்கபட்டுள்ளோம்.

எங்களை நேசித்து வழிநடத்தும் தெய்வமே, இயேசுவே, ஜேம்ஸ் சால்மர்ஸ் போன்று துணிவுடன் உமக்காய் ஊழியம் செய்வேன். கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பேன். இயேசுவின் மூலமாய் ஜெபிகின்றேன் பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (1841 – 1901) "

Post a Comment