விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நியாயத் தீர்ப்பின் நாள்

“அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்குபிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5: 22).

மன்னன் ஒருவனிடம் களவு செய்து பிடிபட்ட வாலிபனை கொண்டு வந்தார்கள். இறக்க குணம் நிறைந்த மன்னன் அந்த வாலிபனைப் பார்த்து, “வாலிபனே நான் உன் குற்றத்தை மன்னித்தேன். இனிமேல் திருடாமல் திருந்தி வாழ வேண்டும்” என்று அறிவுரை கூறி அவனை விடுவித்தார். மன்னனின் இறக்க குணத்தை கண்டு மகிழ்வுடன் வீட்டிற்கு சென்றான். சிறிது நாட்கள் திருடாமல் நல்லவனாய் வாழ்ந்து வந்தான். உலக பொருட்கள் மேலான மோகம் அதிகரிக்கவே மீண்டும் தனது பழைய திருட்டு தொழிலை தொடங்கினான். ஒரு நாள் கையும் களவுமாக பிடிக்கப் பட்டு மன்னன் முன்பதாக நிறுத்தப்பட்டான். மன்னன் அவனைப் பார்த்து புன்னகையுடன், “வாலிபனே! இந்த முறையும் நான் உன்னை மன்னிகின்றேன். இனிமேலாவது திருடாமல் உத்தமனாய் நடந்துகொள்” என்று சொல்லி விடுவித்தார். மன்னனின் இந்த இறக்க குணம் அங்கிருந்த அனைவருக்கும் வியப்பை தந்தது. ஆனால் அந்த வாலிபனின் இருதயமோ மேலும் கடினப்பட்டது. திருடுவதை தண்ணீர் குடிப்பது போல செய்து வந்தான். 

யாராவது அவனுடைய தவறை சுட்டிக்காட்டினால்இறக்க குணம் நிறைந்த மன்னன் தன்னை மன்னித்ததுவிடுவார் என்று சொல்லி மீண்டும் திருட செல்வான். நாட்கள் கடந்து சென்றது.  மூன்றாவது முறையாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டு மன்னன் முன்பதாக நிறுத்தப்பட்டான். மன்னன் மன்னித்து விடுவார். நிச்சயமாக விடுதலை கிடைக்கும் என்ற தெம்புடன் நின்று கொண்டிருந்தான். இந்த முறை மன்னன் நீதிபதியாக ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தார். அவருடைய முகம் இருக்கமாயிருந்தது. திருடிய வாலிபனைப் பார்த்து சொன்னார், “நண்பனே நான் உன்னை நேசிக்கின்றேன். இப்பொழுதும் உன்னை மன்னிக்க எனக்கு மனம் உண்டு. ஆனால் நான் என்ன செய்வேன்நான் இங்கே நீதிபதியாக அமர்ந்திருகின்றேன். இப்பொழுது நானல்லஎனது கையில் இருக்கும் வேத புத்தகமே உன்னை நியாயம் தீர்க்கும். இந்த புத்தகத்தின் சட்டப்படி உனக்கு மரண தண்டனை விதிகின்றேன்என்றார். திருடன் திகிலும் நடுக்கமும் கொண்டான். ஆயினும் மன்னனுடைய தீர்ப்பை யாராலும் மாற்ற இயலவில்லை.


இயேசுவைக் குறித்து வேத வசனம் கூறுகின்றது, “அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்குபிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல்நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5: 22)அதாவது நியாதிபதியாய் இயேசு வரப்போகின்றார். அநேக மனிதர்கள் இயேசுவை மன்னிக்கும் தெய்வமாக பார்கின்றார்கள். ஆகவே தான் தகளுடைய பாவங்களை விட்டு விலகாமல் மீண்டும் மீண்டும் பாவங்களை செய்கின்றார்கள். அவர்களிடத்தில் கேட்டால் இயேசு எனது பாவதிற்க்காக மரித்துள்ளார். பாவம் செய்யும் என்னையும் இயேசு ஒருநாள் மன்னிப்பார் என்று சொல்வார்கள். இயேசுவும் பாவங்களை மன்னிகின்றார். ஆனால் ஒரு நாள் அவர் நியாதிபதியாய் வரப்போகின்றார். அந்த நேரத்தில் அவரிடத்தில் சென்று  நாம் மன்னிப்பு கேட்டக முடியாது. மன்னிக்கும் தெய்வமாக இயேசுவைப் பார்க்கின்ற நாம் அவரை நியாதிபதியகவும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மன்னிக்கும் தெய்வமாகவும், நியாதிபதியகவும் பாப்போம் என்றால் நிச்சயமாக நாம் செய்கின்ற பாவங்களை விட்டு விட்டு இயேசு வாழ்ந்து காண்பித்த நீதியின் வழியில் நடப்போம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " நியாயத் தீர்ப்பின் நாள் "

Post a Comment