விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

எந்நாளும் எரியும் விளக்கு

என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். I இராஜாக்கள் 11:36

தேவனுக்கு பிரியமாக வாழ்ந்த தாவீது அரசனின் குமாரனாகிய சாலொமோன்
முதிர் வயதானபொழுது,  தன்னுடைய மனைவியர்களின் தெய்வங்களைப் பின்பற்ற தொடங்கினார். தேவனுடைய எச்சரிப்புக்கு கீழ்படிய மறுத்தபொழுது, அவருடைய இஸ்ரயேல் நாட்டை உடைக்கும் படியாய் தேவனுடைய கோபம் எழும்பிற்று. அந்த நேரத்தில் தனக்கு கீழ்படிந்து வாழ்ந்த தாவீது அரசனை கர்த்தர் நினைவு கூர்ந்து என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி யூதேயா நாட்டை தாவீதின் தலைமுறையினருக்கு கொடுத்து கர்த்தர் தமது இரக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

சலோமொனின் வழியில் நான்காவது தலைமுறையில் வந்த யோராம் என்ற அரசன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால் சினமடைந்த கர்த்தர் மீண்டும் ஒரு விசை தாவீதிற்க்காய் மனம் இரங்கினார். கர்த்தர்  தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்  (II நாளா 21:7). தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்ற கர்த்தரின் உடன்படிக்கை எப்பொழுது செய்யப்பட்டது என்று தேடிக்கொண்டிருக்கையில், கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (II சாமு 22:29) என்று தாவீது அரசன் பாடுவதை கர்த்தர் கோடிட்டு காண்பித்தார். அப்படியானால் தாவீதுக்கு ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் பலமுறை அவருடைய சந்தியினருக்கு மனமிரங்கியதற்க்கு காரணம், தாவீது கர்த்தரை நோக்கி தேவரீர் என் விளக்காயிருக்கிறீர் என்று உள்ளத்தன் ஆழத்திலிருந்து பாடியதே காரணம்.

கர்த்தர் சொல்கிறார் என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;  என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன். அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். சங்கீதம் 89:20,36,37. தாவீது பாடுகிறார் நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் ஏனென்றால் தேவன் எனக்கு விளக்காயிருக்கிறீர். எனது விளக்கு எந்நாளும் எரியும்படியாய் என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்”. இப்படியாய் தாவீது பாடப்பாட தேவன் மகிழ்ந்து அவருடன் உடன்படிக்கை செய்வதை இந்த வசனகளிலிருந்து அறிய முடிகிறது. தமக்கு பயந்து வாழும் மனிதர்களுக்கு ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; (யாத்தி 34:7) அல்லவா நமது தேவன். ஏறக்குறைய கீ.மு 1௦௦௦ ஆண்டில் தாவீது அரசனால் பயபக்தியோடு சொல்ல்ப்பட்ட வார்த்தையை கர்த்தர் நினைவு கூர்ந்து, என்றும் பிரகாசிக்கின்ற உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்.

கிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்ட நம் அனைவருக்கும் தேவன் விளக்காயிருக்கிறார். இயேசு ஒளியாய் இருக்கின்றார். பரிசுத்த ஆவியானவர் எண்ணையினால் அபிஷேகம் பண்ணுகிறவராய் இருக்கின்றார். நாம் இன்றைக்கு கர்த்தரை எவ்வாறு உயர்த்தி பாடுகிறோம். அன்றைக்கு தாவீது கர்த்தரை உயர்த்தி பாடியபொழுது, கர்த்தர் அதை அவருக்கு உடன்படிக்கையாய் ஏற்ப்படுத்தி அவருடைய எந்நாளும் எரியத்தக்கதாய் மாற்றினார். இதை வாசிக்கின்ற உங்களுடைய வாழ்க்கை எரிந்து பிரகாசிக்கும் படியாய் கர்த்தர் உங்களுக்கு ஒரு விளக்கை கொடுத்துள்ளார். அந்த எரிந்து பிரகாசிகின்றதா? அல்லது மங்கி எரிந்து கொண்டிருகின்றதா?. அனுதினமும் தாவீத்தைபோல துதித்து, ஜெபித்து, அபிஷேகத்தில் நிறைந்தால் நமது வாழ்க்கை என்னும் விளக்கை எந்நாளும் எரியசெய்ய கர்த்தர் போதுமானவராயிருகின்றார். இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார் யோவான் 8:12. எந்த மனுஷனையும் பிரகாசிபிகின்ற மெய்யான ஒளியாக இயேசு உலகத்தில் வந்தார். தன்னை பின்பற்றுகிறவன் எந்நாளும் எரிந்து பிரகாசிக்ககூடிய ஜீவஒளியை பெறுவான் என்று வாக்குறுதியும் அளித்தார். மங்கி எரியும் திரியை அவர் அணைக்காமல் அது நன்கு எரிந்து அநேகருக்கு ஒளி கொடுக்க வேண்டுமென இயேசு விரும்புகின்றார்.

ஒருவேளை நீங்கள் பாவ இருளில் அகப்பட்டிருக்கலாம் அல்லது உங்கள் விளக்கு மங்கி எரிந்து கொண்டிருக்கலாம். இயேசுவை நோக்கி சொல்லுங்கள், “கர்த்தாவே நீர் என் விளக்காகவும், என் ஜீவஒளியாகவும் இருக்கின்றீர். என்னை அனல் மூட்டும் தகப்பனே. குளிருமின்றி அனலுமின்றி  இருந்தால் வாந்திபண்ணிப்போடுவேன் என்று சொல்லி இருகின்றீரே. நான் அனலோடு இருக்கத்தக்கதாய் எனது விளக்கை எரிய செய்திடும் தகப்பனே. நான் அநேகருக்கு ஒளி கொடுத்து எரிந்து பிரகாசிக்க விரும்புகிறேன். என்னில் உள்ள பாவ இருளை அகற்றி என்னை ஒளிமயமாக்கும் ஐயா. இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " எந்நாளும் எரியும் விளக்கு "

Post a Comment