விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வாழ்க்கையை உருமாற்றும் உவமைகள்

மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து, பரலோக ராஜ்யத்தை ஏழு உவமைகளோடு ஒப்பிட்டு பேசினார். அதைக் குறித்து விளக்கமாக இந்த கட்டுரையில் காணலாம்.
1.    பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்கு ஒப்பாயிருக்கிறது (மத் 13:3-8)
2.    பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. (மத் 13:24)
3.    பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது  (மத் 13:31)
4.    பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது (மத் 13:33)
5.    பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது (மத் 13:44)
6.    பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது (மத் 13:45)
7.    பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.(மத் 13:47)


ஏழு என்கிற எண் நாம் இருக்கிற இந்த உலகில்அடிக்கடி காணப்படுகிறது.
உதாரணமாக,
 ஏழு உலக அதிசயங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு கடல்கள், வாரத்தில் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு.வேதத்திலும் ஏழு என்கிற எண் மிகவும் முக்கியமுள்ள எண்ணாக அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தப்படுத்தினார்.ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்களை (ஆதி 12:2-3) தேவன் வாக்களித்தார். பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும், அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும். யோசுவா எரிகோவை சுற்றிவந்தபோது, ஏழு ஆசாரியர்கள், உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி, ஏழு எக்காளங்களை முழக்கி, ஏழாவது நாள், ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக்குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும்,ஏழு பொன் குத்து விளக்குகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கண்கள், ஏழு ஆவிகள், ஏழு கோபகலசங்கள், ஏழு இடிமுழக்கங்கள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். மத்தேயு சுவிசேஷம் 13-ம்
அதிகாரத்தில்
 பரலோக ராஜ்யத்தை குறித்து ஏழு உவமைகளை இயேசு கூறினார். இயேசு கிறிஸ்து தாம் இந்த உலகத்தில் வந்ததின் நோக்கத்தை பரிபூரணமாக அல்லது முழுமையாக வெளிப்படுத்த விரும்பி இங்கே ஏழு உவமைகளை கூறியுள்ளார். அந்த ஏழு உவமைகளிளுமே ஒரு புதிதான காரியத்தை மக்களுக்கு போத்தித்தார். அப்படியென்றால் அந்த ஏழு உவமைகளில் அடங்கியுள்ள ஆழமான, முழுமையான, பரிபூரணமான காரியம் என்ன?

அந்த ஆழமான, முழுமையான, பரிபூரணமான காரியம் என்னவென்றால் பரலோக ராஜ்ஜியம். வெளிநாடுகளில் தங்கி வாழ்ந்துவிட்டு பின்பதாக சொந்த நாட்டுக்கு திரும்பி வாழும் அநேகரை நாம் சந்திருக்க கூடும். அவர்கள் நிச்சயமாக தனது வெளிநாட்டு அனுபவங்களை பிறருக்கு சொல்லுவார்கள். அந்த நாட்டின் மேன்மையான காரிகாரியங்களை அடிக்கடி நினைவுபடுத்தி நமக்கு சொல்வார்கள். இதேபோலத்தான் இயேசுவும் பரலோகத்தின் அதிபதியாய் வாழ்ந்து, மனிதர்களின் பாவங்களை சுமந்து, சிலுவையிலே அதை தீர்க்கும் படியாய், இந்த உலகத்திற்கு வந்தார். உலகத்தில் எந்த மனிதனும் பரலோகத்தில் சில நாட்கள் வாழ்ந்து பின்பதாக பூமிக்கு வந்து வாழ்ந்தது இல்லை. ஆனால் இயேசுவோ பரலோகத்தின் மேன்மையான காரியங்களை ஆதி முதலே ருசித்தவராய் இந்த பூலோகத்திற்கு வந்தார். பரலோக ராஜ்யத்தின் மேன்மைகளை, மனிதர்களுக்கு முழுமையாகவும் பரி பூரணமாகவும் வெளிப்படுத்த சித்தம் கொண்டவராய் இந்த ஏழு உவமைகளையும் கூறினார். இயேசு தனது ஊழியத்தை தொடங்கியவுடனே மக்களுக்கு போதித்த முதல்செய்தி மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்4:17). ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, பரலோகராஜ்யத்தை குறித்தே பரிபூரணமாக போதித்தார் இயேசு. பரலோக ராஜயத்தை குறித்தான மிக முக்கியமான செய்தியை பல யூதரபிகளும், மக்களும் கேட்ப்பதற்கு மனம் இல்லாமல் இருக்கையில் கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று தாம் போதித்த பரலோக ராஜயத்தின் மேன்மையை உணர்த்துகின்றார் இயேசு.

இயேசு இந்த ஏழு உவமைகளையும் சொல்லிய பின்பு, மிக முக்கியமான எட்டாவது உவமையை சீடர்களுக்கு கூறினார். ஏழு உவமைகளும் முழுமையையும் பரிபூரணத்தையும் வெளிப்படுத்தின்னாலும், அந்த ஏழு உவமைகளின் மெய் கருத்தை சீடர்கள் மக்களுக்கு போதிக்க வேண்டுமென விரும்பினார். உலக மக்கள் சீடர்களை சாதாரண கலிலேய மீனவர்களாக பார்க்கையில் இயேசு அவர்களை தேறின வேதபாரகர்களாக அதாவது நன்கு கற்றுத்தேர்ந்த போதகர்களாக, சுவிஷேகர்ககளாக பார்த்து இந்த எட்டாவது உவமையை கூறினார். “பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்” (மத் 13:52)

8.   வீட்டெஜமானாகிய மனுஷன் - பரலோக ராஜயத்தின் ரகசிங்களை அறிந்தவர்கள் (நீங்களும் நானும்)
9.   புதியவைகள் மனம் திரும்புங்கள், பரலோக ராஜயம் சமீபம் என்ற நற்ச்செய்தி
10.  பழையவைகள் பழைய ஏற்பாட்டின் நியாயபிரமானங்கள்

செல்வ சீமானிடம் உதவிகள் பெறுவதற்காக ஒரு ஏழை மனிதன் செல்கிறான். அந்த செல்வ மனிதன் முதலாவதாக தன்னிடத்தில் உள்ள புதிய பொருட்களை கொடுக்க வேண்டும். புதிய பொருட்கள் நிறைவாகும் சமயத்தில் தன்னிடத்தில் அதிகமாய் உள்ள பழைய பொருட்களையும் அந்த ஏழை மனிதனுக்கு கொடுக்க வேண்டும் என்று உவமையாக சீடர்களிடம் கூறினார். அதாவது நன்கு கற்றுத்தேர்ந்த போதகர்களும், சுவிஷேகர்களும் மனம் திரும்புங்கள், பரலோக ராஜயம் சமீபம் என்ற புதிய நற்ச்செய்தியை தம்மை நோக்கி வரும் இயேசுவை அறியா ஏழ்மையான மக்களுக்கு போதிக்க வேண்டும். பரலோக ராஜயத்தின் மேன்மையும், மனிதன் அதில் பிரவேசிக்க இயேசு செய்த தியாகத்தை பற்றி ஒருவர் நிறைவாக அறிந்த பின்பு பழைய ஏற்பாட்டின் நியாயபிரமானங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களையும் அவைகளுக்கு போதிக்க வேண்டும் என்று இயேசு இந்த உவமையின் மூலம் சீடர்களுக்கு கூறினார்.

நமது சொந்தமும், உற்றார் உறவினர்களும் நம்மை சாதரணமான மனிதர்களாக பார்த்துகொண்டிருக்கையில் இயேசுவோ நம்மை, அவருடைய வேலையை செய்யும் ஊழியக்காரர்களாகவும், தேறிய போதகர்களாகவும், சுவிஷேசகர்களாகவும் பார்த்துகொண்டிருகின்றார். பரலோகரஜ்யதின் ரகசியங்களையும், இயேசுவின் அன்பையும் அறிந்த நீங்களும் நானும் உண்மையிலே பேறுபெற்றவர்கள். நம்மை சுற்றி வாழும் இயேசுவைப் பற்றி அறியாத ஜனங்களுக்கு, முழுமையான மற்றும் பூரணமான பரலோக ராஜய்த்தின் நற்செய்தியை நாம் சொல்ல வேண்டுமென இயேசு விரும்புகின்றார். நாம் அறிந்த ரகசியங்களை பிறருக்கு சொல்வோம். கேட்பதற்கு காதுள்ளவர்கள் நம் மத்தியில் அநேகர் உண்டு. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " வாழ்க்கையை உருமாற்றும் உவமைகள் "

Post a Comment