விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்

இயேசு கூறினார், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்”. யோவான் 7:38.

சிறிய நீர்வழி ஓடை என்று அழைக்கப்படும். மலைகாலங்களில் ஓடையில் தண்ணீர் ஓடும். வெயில்காலங்களில் தண்ணீர் ஓடாமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். சிறிது நாட்களில் அந்த தண்ணீரானது பாசிபிடித்து துர்நாற்றம் வீசதொடங்கும். பின்னர் நோய்பரப்பும் கொசுக்களுக்கு புகலிடமாய் மாறிவிடும். மழைபெய்தால் மீண்டும் ஓடையில் புதிய தண்ணீர் வரும். இதை காட்டு ஓடை என்று கிராம மக்கள் அழைப்பார்கள். பல ஓடைகள், பல நீரூற்றுகள் எல்லாம் இணைந்து நதியாய் (ஆறு) மாறுகின்றது. அநேக நீர்ஊற்றுகளின் காரணமாக நதியின் நீரானது ஓடிக்கொண்டே இருக்கும். தேவன் ஏதேன் தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி நாலு பெரிய ஆறுகளை ஏற்படுத்தினார். மனித நாகரீக துவக்கமே நதியில் இருந்துதான் துவங்குகின்றது.

ஆசியாவின் ஜீவ நதி பிரம்மபுத்ரா திபெத்தின் தென்மேற்கு பகுதியில் உருவாகி இமாலய மலைத்தொடர் வழியாக உட்புகுந்து இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உட்புகுந்து, தென் மேற்கு பகுதியாக பாய்ந்து அசாம் வழியாக வங்கதேசத்தில் நுழைந்து இறுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. 2012 ம் வருடம் மார்ச் மாதம் சீன அரசு ஏற்ப்படுத்திய செயற்கை தடுப்புகளால் ஜீவ நதி என்று அழைக்கப்பட்ட பிரம்மபுத்ரா  வறண்டு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. மத்திய கிழக்கு நாடுகளின் ஜீவநதியாக கருதப்படும் யூப்ரட்டீஸ் நதி (ஐபிராத்து நதி) சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளை செழிப்படைய செய்கிறது. இந்நதி வரலாற்றில் எந்த கால்த்திலும் வற்றிப்போனதாக எந்த குறிப்பும் இல்லாத நிலையில் இப்போழுது இந்நதி வற்றி வருகிறது என்ற செய்தியை நியுயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது. இப்படி உலக பிரசித்திபெற்ற பெற்ற நதிகள் வற்றி வரும் நிலையில் அவைகள் பெயரளவிலே மட்டும் ஜீவநதியாக உள்ளன.

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது, ஒரு நாள், “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார்.  இயேசுகிறிஸ்து சிறிய நீரோடையையோ அல்லது வற்றிப்போகும் நதிகளையோ நமக்கு வாக்களிக்கவில்லை,அவர் நமக்கு நித்திய ஜீவகாலமாய் ஓடுகின்ற ஜீவத்தண்ணீருள்ள நதியை நமக்கு வாக்களித்திருக்கிறார். தாகத்தோடு வரும் எந்த மனிதன் உள்ளத்திலும் ஜீவ ஊற்றாய் இயேசு தோன்றுகின்றார். அந்த ஜீவஊற்றானது அநேகருடைய வாழ்க்கையில் நதியாய் பாய வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். ஓடும் நதி ஒரு இடத்திலே தங்கி நிற்பதில்லை. நானே ஜீவதண்ணீர் என்று முழங்கிய இயேசு, பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் நதி போல சுற்றி திரிந்து ராஜய்த்தின் சுவீஷேசத்தை பிரசங்கித்தார். அநேக கிறிஸ்தவர்கள் ஜீவ ஊற்றை விரும்புகின்றார்கள். அதிலிருந்து வரும் நன்மைகளை பெறுகின்றார்கள். ஆனால் ஜீவநதியாய் அநேக இடங்களுக்கு பாய மறுத்து விடுகின்றார்கள். தங்கள் குடுபத்திற்க்கு தாங்கள் ஆசீர்வாதமாய் இருந்தால் போதும் என்று நினைத்து ஒரே இடத்தில் தேங்கி நின்று விடுகின்றார்கள். நாம் இரட்சிக்கபட்ட பொழுது நமக்குள் தோற்றிய இயேசு என்னும் ஜீவ ஊற்றானது, பல தெருக்களுக்குள், கிராமங்களுக்குள், பட்டனங்களுக்குள், தேசங்களுக்குள் ஜீவநதியாய் பாய்ந்து அவருடைய அன்பை எடுத்து செல்ல வேண்டும். இந்த ஜீவஊற்று நதியாய் பாயவில்லை என்று சொன்னால் அது தேங்கி நின்ற ஓடைத்தண்ணீரை போல பயனற்றதாக மாறிவிடும். நாம் இயேசுவை விசுவாசித்து சுவிஷேச ஊழியம் செய்யும் பொழுது நம்மில் இருந்து ஜீவநதி புறப்படும். பக்கத்து தெருவில் அல்லது கிராமத்தில் சென்று ஜீவநதியாய் சுவிசேஷம் சொல்லலாமே? உடன் படிப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் நண்பர்களுக்கு சுவிசேஷம் சொல்லலாமே?. இயேசு நமக்கு தந்த ஜீவஊற்று, நதியாய் பாயவேண்டுமென்றால், இயேசுவின் அன்பை பிறருக்கு அறிவித்தே ஆக வேண்டும். அப்பொழுது ஜீவ ஊற்றானது ஜீவ நதியாய் பாயத்தொடங்கும். அதின்மூலம் நீங்களும் அநேக மக்களும் நண்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்.

ஜெபம்: ஜீவ நீரூற்றாய் என்னுள் தோன்றிய எங்கள் தகப்பனாகிய இயேசுவே, உம்மிடத்தில் விசுவாசம் உள்ளவன் எவனோ,அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று சொன்னீரே, எங்கள் உள்ளத்தில் இருக்கும் ஜீவ ஊற்று,  பாயும் ஜீவ நதியாய் மாறட்டும். அந்த நதி அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கவும், அதிலிருந்து அநேகர் பருகி, உமக்கு சாட்சியாக விளங்கவும் கிருபை தாரும். இயேசுவின்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் "

Post a Comment