விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மகாராஜன் வேதமாணிக்கம்

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த

தயாபர பிதாவே, நமஸ்காரம்.


கிறிஸ்தவர்கள் அதிகமாய் விரும்பி பாடும் இந்த துதிப் பாடலை எழுதிய அருள் திரு. மகாராஜன் வேதமாணிக்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். வேதமாணிக்கம் தேசிகரை அறியாத மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலே இல்லை எனலாம். இந்த மாவட்டம் 18ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் கல்வியறிவு பெற்றிராத மக்கள் எண்ணிக்கைக்கு அடங்கா கடவுள்களை வழிபட்டு வந்தனர். கீழ் ஜாதி பெண்கள் மேலாடை அணியக் கூடாது. கணவர் இறந்தால் மனைவிகளும் தீயில் விழுந்து மரிக்க வேண்டும் போன்ற பல சிக்கலான சமூக அமைப்புகளையும், ஜாதிச்சடங்குகளாலும் நிறைந்து காணப்பட்டது இந்த குமரி மாவட்டம். 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் கன்னியாகுமரி பகுதிக்கு வந்த போதே சிக்கலான சமூக அமைப்புகள் சுமூகமான விடுதலையைக் கண்டது. நாகரீகமும் நலமான வாழ்வு முறையும் மக்களிடம் துளிர்விட தொடங்கியது. குட்டி தெய்வங்களுக்கு முன் கூனிக்குறுகிக் கிடந்த மக்கள், கிறிஸ்து இயேசுவுக்குள் தலை நிமிர ஆரம்பித்தார்கள். பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர். பல கிறிஸ்தவ தேவ ஆலயங்கள் எழும்பினது. மறைதிரு. W.T. றிங்கல்தௌபே மற்றும் மறைத்திரு சார்லஸ் மீட் போன்ற மிஷனரிகளின் வருகையால் பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் தோன்றின. ஒரு காலத்தில் படிப்பறிவு பெற்றிராத குமரி மாவட்டம் இன்றைக்கு 87.6 படிப்பறிவு பெற்ற மக்களால் நிரம்பியுள்ளது. இத்தகைய மாபெரும் சமூக உயர்வுக்கு காரணமாய் அமைந்த வேதமாணிக்கம் தேசிகரைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

1750-
ம் ஆண்டுக்கு பின், மதுரநாயகம்-தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக மயிலாடி என்ற ஊரில் பிறந்தார் வேதமாணிக்கம். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். சிறுவயதிலேயே சிவ பக்தராகவும், உண்மை, ஆன்மிகம் ஆகியவற்றை தேடும் உயர்ந்த நாட்டம் உடையவராகவும் இருந்தார். 1799ம் ஆண்டு சிதம்பரம் என்ற இடத்தை நோக்கி புண்ணிய பயணம் மேற்கொண்டார். கடவுளை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றார், அங்கு நடைபெற்ற வழிபாடுகள், அவருக்கு வெறுப்பையும், ஏமாற்றத்தையுமே தந்தன. இதனால் மனமுடைந்த அவர் ஓர் தூணில் சாய்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது வெண்ணங்கி தரித்த ஒரு தூதன் கனவில் தோன்றி, “நீ செல்ல வேண்டிய இடம் வேறு, புறப்படு, வழிகாட்டுகிறேன்என்று கூற, அந்த சத்தத்திற்கு கீழ்படிந்து எழுந்து புறப்பட்டார். தஞ்சாவூர் வந்த பொழுது கோலாப் ஐயர்மூலமாக மெய் தெய்வமாகிய இயேசுவைப் பற்றி அறிந்து கொண்டார். கனவில் தோன்றிய தூதன் தன்னை சரியான வழியில் நடத்தியிருப்பதை எண்ணி வியப்படைந்தார். சத்தியத்தை அறிந்த அவர் காலம் தாழ்த்தாமல் கோலாப் ஐயர்மூலமாக ஞானஸ்நானம் பெற்று புதிய மனிதனானார்.

20-
வது வயதில், மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார் வேதமாணிக்கம். தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்; இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார். தன் உறவினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து, அவர்களையும் ஞானஸ்நானம் பெற செய்தார். தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார். ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக கிறிஸ்துவை அறிவித்து வந்தனர். மேலும் ஜெர்மானிய மிஷனரி W.T. றிங்கல்தௌபே அவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து கிறிஸ்துவ பணியை செய்ய உருந்துனையாக இருந்தார். பின்னர் இங்கிலாந்து மிஷனரி சார்லஸ் மீட் என்பவருக்கும் ஊழியத்தில் துனையாக இருந்தார். 

1827-
ம் ஆண்டு, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ” “ஜீவ வசனம் கூறுவோம்,”என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இயேசு தமிழ் மக்களை அதிகம் நேசிக்கின்றார் என்பதற்கு வேதமாணிக்கம் தேசிகருடைய வாழ்க்கை ஓர் சான்றாகும். வேதமாணிக்கம் கர்த்தருடைய சமூகத்தில் இளைப்பாறினாலும் அவர் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் நம்முடைய இருதயத்தில் தவளுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் இன்றைக்கு அதிகளவில் காணப்படுவதற்க்கு வேதமாணிக்கம் தேசிகர் தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். நீங்களும் வாழ்கையை கர்த்தரிடம் அர்ப்பணித்து, அவருக்கு பிரியமாய் வாழ்ந்தால் உங்களைகொண்டும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தி வரும் இயேசுவே, உம்முடைய கிருபைக்காய் நன்றி. வேதமாணிக்கம் தேசிக்கருக்கு தூதன் மூலம் கனவில் தோன்றி உம்மை வெளிப்படுத்தினது போல எனக்கும் உம்மை வெளிப்படுதினதற்க்காய் நன்றி. நானும் உமக்காய் ஊழியம் செய்து உமக்கு பிரியமாய் வாழுவேன். உமக்காய் சாதிக்க என்னை உமது கரத்தில் தருகிறேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

4 Responses to " மகாராஜன் வேதமாணிக்கம் "

  1. vedha manikkam avarkal diwan veluthambiku ayanthu sathankulam jamintharidam adaikalam ugunthathagavum pinnar avar angirunthu madras attinathuku sentrathagaum kooraadum varalaru kaanome yean ?

    ReplyDelete
  2. கல்லுக்கூட்டத்தில் போதகராக இருந்த வேதமாணிக்கமும் மைலாடி மகராஜன் வேதமாணிக்கமும் ஒரே நபரா,வெவ்வேறு நபர்களா? தெரிந்தால் எனக்கு தெரிவித்தால் நன்றி உள்ளவனாய் இருப்பேன்.
    அன்புடன்
    ஜான் தேவதாசன்,
    கோடம்பாக்கம்,சென்னை.
    தொலைபேசி:9841236974.

    ReplyDelete
  3. கல்லுக்கூட்டத்தில் போதககராக பணியாற்றியவர் 20நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    மகாராசன் வேதமாணிக்கம் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்.இருவரையும் தெரியாமல் குழப்பியுள்ளனர்.

    மகாராசன் காலத்தில் மைலாடி,தென்தாமரைகுளம்,ஜேம்ஸ்டவுன்,ஈத்தாமொழி,ஆத்திகாடு,புத்தளம்,கோயில்விளை ஆகிய 7ஊர்களில் தான் கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. அவர் பாடல்கள் எதுவும் எழுதவில்லை,சில கிறிஸ்தவ நூல்கள் எழுதியுள்ளார்.

    ReplyDelete
  4. 1800களில் வாழ்ந்தவர் எப்படி 1912ல் திருமணம் செய்திருக்க முடியும்.அவர் வேறு,இவர் வேறு.

    மேலும் 1827ல் பஸ் பயணம் பற்றி கூறியுள்ளீர்கள்.அப்போது பஸ் கிடையாது.20ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதமாணிக்கம் என்ற போதகர் தான் 1927ல் பஸ்ஸில் பயணிக்கும் போது மேற்கூறிய விபத்தினால் காலில் அடிப்பட்டு புண் ஆறாததால் இறந்தவர்.

    ReplyDelete