விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

சோதனைகளை தோற்கடிக்க..


மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு
நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். (1 கொரிந்தியர் 10:13) 

தொடர்ச்சியான வாழ்வின் போராட்டங்களால் துவண்டு போன மகள் சமையல் கார தனது தகப்பனிடம் சென்று தனது பிரச்சனைகளைக் கூறி கண்ணீர் வடித்தாள். சமுதாயத்திலிருந்து வரும் சவால்களை தன்னால் எதிர்கொள்ள முடியவில்லை என்று முறையிட்டாள். பொறுமையோடு அதைக்கேட்ட அந்த சமையல் வேலை செய்யும் தகப்பன் அவளை சமையல் அறைக்குள் அழைத்து சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வைத்து, ஒன்றில் உருளைக்கிழங்கும், இரண்டாவது பாத்திரத்தில் முட்டையும், மூன்றாவது பாத்திரத்தில் தேயிலை தூளையும் இட்டு கொதிக்க வைத்தார். சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து பத்திரங்களை எடுத்து மகளுக்கு முன்பாக வைத்தார். தகப்பனுடைய செயலை புரிந்து கொள்ள இயலாத மகள் அவருடைய முகத்தை கேள்வியோடு உற்று நோக்கினாள். அப்பொழுது தகப்பன் அவளை நோக்கி, “தண்ணீரில் கொத்திக்க வைப்பதற்கு முன் உருளைகிழங்கும், முட்டையும், தேயிலை தூளும் எப்படி இருந்தது?” என்று கேட்டார். உருளைக் கிழங்கு கடினமாகவும், முட்டை உடயைக்கூடியதாகவும், தேயிலை தூளாகவும் இருந்ததாக கூறினாள். 

தகப்பன் மீண்டும் அவளை நோக்கி, “நன்று மகளே, தண்ணீரில் கொத்திக்க வைப்பதற்கு பின் உருளைகிழங்கும், முட்டையும், தேயிலை தூளும் எப்படி இருகிறது?” என்று கேட்டார். தண்ணீரில் நன்கு வெந்திருந்த உருளைக் கிழங்கை தொட்டுப் பார்த்த மகள், மிருதுவாய் இருப்பதாகவும், உடயைக்கூடியதாக இருந்த முட்டை, கடினமாய் மாறியிருப்பதகவும், ஆனால் தேயிலை தூள் மட்டும் தூளாகவே தண்ணீருக்கு அடியில் தங்கியிருப்பதாக கூறினாள். அப்பொழுது தகப்பன் மகளை நோக்கி, ‘சரியாக சொன்னாய் மகளே. ஒரே தண்ணீரில் தான் மூன்றையுமே கொதிக்க வைத்தேன். உருளைக்கிழங்கு கொதிநீரில் மிருதுவானது. முட்டையின் உள்ளே இருந்த திரவம் கொதிநீரில் கடினமாய் மாறினது. ஆனால் தேயிலைத் தூளைக் கண்டாயா? அது மாத்திரம் தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல், தண்ணீரின் நிறத்தை மாற்றியிருகின்றது”. கொதிநீரைப் போன்ற எவ்வளவு கொடிய சோதனை வாழ்வில் வந்தாலும், உருளைக் கிழங்கைப் போன்றோ அல்லது முட்டையை போன்றோ நம்முடைய நிலை மாறிவிடக்கூடாது. அந்த தேயிலை தூள் எப்படி தன்னுடைய நிலை மாறாமல் தூளாகவே இருந்து, கொதிநீர் முழுவதையுமே நிறம் மாற்றியதோ, அதே போல நீயும் உனக்கு வரும் சோதனைகளை எதிர்க்கொண்டு அதைத் தோற்கடிக்க வேண்டுமென கூறினார். தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டு, வாழ்வில் வரும் சோதனைகளைக் கண்டு பயப்படப்போவதில்லை என்று தகப்பனிடம் உறுதி கூறினாள் மகள்.

இது போலவே, நமக்கு வரும் பிரச்சனைகளை குறித்து, நாம், ’என்னால் தாங்க முடியாத பாரமாயிருக்கிறதே, கடவுள் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறாராஎன்று நினைக்கலாம். கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்என்று சொல்கிறது. அவர் நிச்சயமாக நம்முடைய திராணிக்கு மேலாக நம்மை சோதிக்கவே மாட்டார். மட்டுமல்ல, வரும் சோதனையிலிருந்து தப்பித்து கொள்ளத்தக்கதான வழியையும் நமக்கு காட்டுவார். சோதனைகளால் நாம் துவண்டு நம்முடைய நிலை மாறிவிடக்கூடாது. நாம் சோதனைகளை தோற்கடிக்க தேவனால் அழைக்கப்பட்டவர்கள். ஜெயக்கிறிஸ்து நம்மோடு. நமது வாழ்வில் என்று ஜெயமே.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " சோதனைகளை தோற்கடிக்க.. "

Post a Comment